கொரோனா கட்டுக்குள் இருப்பதால் அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் - முதலமைச்சர் சிவராஜ் சவுகான்
கொரோனா கட்டுக்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள் முழு அளவில் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், மால்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் நூறு சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments