ஜெய்ப்பூரில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

0 5733

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் மார்டின் கப்தில் 70 ரன்னும், மார்க் சாப்மன்  63 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த போதும் 19 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்கள் சேர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments