சென்னைக்கு ரெட் அலெர்ட்: தமிழகத்தில் மழை தொடரும்!

0 6545

வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி இன்று நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை மையம் அம்மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேபோன்று திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

திருநெல்வேலி, செங்கல்பட்டு, தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments