நாட்டின் 7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவைக்காக ரூ.6,466 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு
நாட்டில் செல்போன் சேவை கிடக்கப்பெறாத 7 ஆயிரத்து 287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கும் திட்டத்தை 6 ஆயிரத்து 466 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா , ஒடிசா மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை செல்போன் சேவை கிடைக்கபெறாத கிராமங்களுக்கு அந்த சேவையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், கல்வி நிலையங்கள் பயன்பெறும் என்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் மக்கள் அறிய வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்த மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும் இது உதவிபுரியும் என குறிப்பிட்டுள்ளது.
Comments