சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் பெயரில் போலி வலைதளம் தொடங்கி மோசடி.! குஜராத்தில் இருவர் கைது

0 3310

சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்சியின் பெயரில் போலி வலைதளம் தொடங்கி பணம் பறித்த கும்பலை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி வலைதளம் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடி நடைபெறுவதாக மெட்ராஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனம் புகாரளித்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட தேவ்ராஜ்சிங், ஷ்ரவன்சிங் ஆகிய இருவரையும் அகமதாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து கொண்டு போலி வலைதளம் தொடங்கி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட தேவராஜ்சிங்கின் சகோதரர் திலீப் சிங் என்பவனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments