கிருஷ்ணகிரி அருகே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்திமுகம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த மோகன் என்பவரும் சூளகிரியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் சிக்கினர். விசாரணையில் இருவரும் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துவிட்டு மருத்துவம் சார்ந்து ஏதும் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் சிகிச்சை அளித்துவந்த கிளினிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
Comments