ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் என்கவுன்ட்டர்.. 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0 3338

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள பொம்பய், கோபால்போரா ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட  நிலையில் அப்பகுதிகளில் மேலும், தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேரை பாதுகாப்புப் படையினர் - காவல்துறையினர் இணைந்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments