கொரோனாவுக்கு சீனா தயாரித்துள்ள தடுப்பூசிகள் சிறந்த பயனளிப்பதாக ஆய்வில் தகவல்
சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதியாகியுள்ளதாக சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஜெங் ஜோங்வெய் கூறியிருக்கும் தகவலை மேற்கோள்காட்டியுள்ளது. சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது.
இவை இரண்டையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. உலகம் முழுவதும் 110 நாடுகளுக்கு, சுமார் 170 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது.
Comments