செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு... 710 பேர் மீது வழக்கு, 150 பேர் கைது.!
மதுரையில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலைகழக கல்லூரி, மதுரா கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசாரின் அறிவுறுத்தல்களையும் மீறி 3வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், சுமார் 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களில் 150க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Comments