மாசு இல்லா அலுவலக பயண நாள் அனைத்து துறைகளிலும் கடைபிடிக்க வேண்டுகோள் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

0 2446

மாசு இல்லா அலுவலக பயண நாளை அனைத்து துறைகளிலும் கடைபிடிக்க, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள 132 நகரங்களில் சென்னையும் ஒன்று, என குறிப்பிட்ட அவர், தமது அலுவலக ஊழியர்கள், புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்து, மின்சார வாகனம் அல்லது சைக்கிளில் அலுவலகம் வருவது, இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை அனைத்து துறைகளிலும் பின்பற்ற அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், பொது போக்குவரத்தை பயன்படுத்தினால், காற்று மாசை பெரிதளவில் குறைக்க முடியும், என்றும் உதயன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments