சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஸ்வாமி தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
சபரிமலையில் காலை நடை திறக்கப்பட்டதும், கேரள தேவஸ்தான துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்
Comments