இறந்து கிடந்த குட்டி யானையை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்ப முயன்ற தாய் யானை..

0 3439
கேரளாவில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தனது 3 வயது குட்டி யானையை, தாய் யானை தும்பிக்கையில் எழுப்ப முயன்ற வீடியோ காட்சிகள் காண்போரை கண் கலங்கச் செய்கிறது.

கேரளாவில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தனது 3 வயது குட்டி யானையை, தாய் யானை தும்பிக்கையில் எழுப்ப முயன்ற வீடியோ காட்சிகள் காண்போரை கண் கலங்கச் செய்கிறது.

பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகேயுள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தடவி தடவி எழுப்ப முயற்சித்தது.

குட்டியானை இறந்து விட்டதை உணர்ந்த தாய் யானை சோகத்துடன் திரும்பிச் சென்றது. இதனையடுத்து, உயிரிழந்த குட்டியானைக்கு உடற்கூராய்வு நடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments