பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த விவகாரம் ; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணை நிறைவு
கோவையில் சின்மயா வித்யாலாயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட சின்மயா பள்ளியின் சக ஆசிரியர்கள், தற்போதைய பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோரிடம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவர் விசாரணை நடத்தினார்.
மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதன்மை கல்வி அலுவலரின் விசாரணை முடிந்து, அறிக்கை தயாரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் விசாரணை அறிக்கை பள்ளிக்கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
Comments