கமலா ஹாரிஸை புறக்கணிக்கிறாரா ஜோ பைடன்..? புதிய துணை அதிபரை தேர்ந்தெடுக்க ஜோ பைடன் முயற்சி

0 5927
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், அவர் மீது துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், அவர் மீது துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற பதவி வழங்கிவிட்டு, புதிய துணை அதிபரை தேர்ந்தெடுக்க, ஜோ பைடன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை பிரச்னை தொடர்பான விவகாரத்தில், அவரது செயல்பாடு ஜோ பைடனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், துணை அதிபரை விட, போக்குவரத்து அமைச்சராக உள்ள பீட் பட்டிகெக்கிற்கு, ஜோ பைடன் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த அதிபர் தேர்தலில், கமலா ஹாரிசின் பிரச்சாரம், அமெரிக்க பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஜோ பைடனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

2024 அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு  வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் - துணை அதிபர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments