அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகள் குறித்து ஆய்வு ; அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம்

0 4797
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம்

உலக நாடுகளின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்துள்ளதுடன் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை பெறும் முதல் பத்து நாடுகளில் McKinsey & Co நிறுவனம் நடத்திய ஆய்வில், 2 ஆயிரமாவது ஆண்டில் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த சொத்து மதிப்பு 2020-ல் 514 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக கூறப்படுள்ளது.

இதில், 2 ஆயிரமாவது ஆண்டில் வெறும் 7 ட்ரில்லியன் டாலராக இருந்த சீனாவின் சொத்து மதிப்பு 2020-ல் 120 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 90 ட்ரில்லியன் டாலராக உள்ள நிலையில், சீனா மற்றும் அமெரிக்காவில் 3ல் 2 பங்கு சொத்துக்களை 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக நாடுகள் வைத்துள்ள சொத்துக்களில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளதாகவும், ஒரு வேளை ரியல் எஸ்டேட் துறை சரிந்தால் உலகின் 3-ல் ஒரு பங்கு சொத்து மதிப்பு அழிந்துவிடும் எனவும் McKinsey ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments