முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு - அமைச்சர் துரைமுருகன்
கேரளாவில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 13ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் இன்று அணையில், நீர் வரத்து, அணை நிலவரம் தொடர்பாக துரைமுருகன் ஆய்வு செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கடந்த ஆட்சியில் அவசரகதியில் தொடங்கப்பட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் செல்வதாகவும், மேலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர்த் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கூட்டு குடிநீர் திட்டத்தையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
Comments