தமிழ்நாட்டில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3575
பன்றிக் காய்ச்சல் தொடர்பாக 13 நபர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு நபர்களுக்கு அது உறுதியாகி உள்ளதாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக 13 நபர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு நபர்களுக்கு அது உறுதியாகி உள்ளதாக  மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த அவர், கேரளா தமிழ்நாடு எல்லைகளில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுவதாக கூறினார்.

எனவே தமிழ்நாட்டிற்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது என்று அவர் கூறினார்.  தற்போது வரை 463 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவது குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், 1.05 கோடி தடுப்பூசிகளை அண்ணாமலை இடம் கொடுக்கிறோம் அவர் திண்டாட்டம் இல்லாமல் செலுத்தட்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments