பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அம்மாநிலத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களை இணைக்கும் வகையில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், 341 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சாலையின் சுல்தான்பூர் பகுதியில் அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு போர்விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, விமானப் படையின் சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் தரையிறங்கினார்.
இதனை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு முன் பூர்வாஞ்சல் விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அதிவிரைவுச்சாலையில் விமானத்தில் வந்திறங்குவேன் என நினைத்துக் கூடப்பார்க்கவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
Comments