கர்ப்பமான பெண் வழக்கறிஞர்கள் மெய்நிகர் வழியாக வழக்கு நடத்தக் கோரி மனு... மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்.!
கர்ப்பமாக இருக்கும பெண் வழக்கறிஞர்கள் மெய்நிகர் வழியாக தங்களின் வழக்கு விசாரணையை மேற்கொள்ளலாம் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பெண் வழக்கறிஞர்கள் கர்ப்ப காலத்தில் மெய்நிகர் விசாரணையைத் தேர்வுசெய்ய ஒரு விருப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வாய்ப்பினை குறைந்தபட்சம் 26 வாரங்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, இந்திய பார் கவுன்சில், இந்திய உச்ச நீதிமன்ற பதிவாளர் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
Comments