மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வுத் தொகை ரூ.47,541 கோடி வழங்கப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கான கூடுதல் அதிகாரப் பகிர்வு தொகை வரும் 22ம் தேதி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலங்கள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள பணம் இருப்பு அவசியம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுதல் அதிகாரப் பகிர்வுத் தொகை 47 ஆயிரத்து 541 கோடி ரூபாய் வரும் 22ம் தேதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள உபரி நிலங்களை மாநிலங்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க சில மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றில் தொழில்நுட்ப பூங்காக்கள் கட்ட அனுமதிக்குமாறு கோரியுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments