7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத் தொகையை விடுவிப்பதாக தெரிவித்த உயர்கல்வித் துறை

0 2512

7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத் தொகையை விடுவிப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 7 ஆயிரத்து 876 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏறத்தாழ 74 கோடியே 28 லட்ச ரூபாய் கட்டணம் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டண தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 55 ஆயிரமும், வளர்ச்சி நிதி, விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், எனத் தனித்தனியாக கணக்கிடப்பட்டு விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த கட்டணமும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments