"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நிலக்கரி விவகாரத்தில் சீனா, இந்தியா விளக்கம் தரவேண்டும் ; கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் தலைவர் வலியுறுத்தல்
நிலக்கரி பயன்பாடு தொடர்பாக, சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு விளக்கம் தர வேண்டும், என கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா பருவநிலை மாநாட்டில், மின்சாரத் தயாரிப்புக்கு நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் கைவிடுவது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
எனினும், மாநாட்டின் இறுதி வடிவ அறிக்கையில், சீனா மற்றும் இந்தியா அளித்த நெருக்கடி காரணமாக, நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது என, அந்த வாசகம் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
Comments