நாகப்பட்டினத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் - தமிழக அரசு

0 2775

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியதைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. 

திருமருகல் ஒன்றியத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப் புள்ளி கோரித் தமிழக அரசின் சிறு குறு நடுத்தரத் தொழில்கள் நிறுவனம் நாளிதழ்களில் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதைத் திரும்பப் பெறுவதாகவும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments