தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி

0 3035
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வர்த்தகரீதியான விமானங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர், கொரோனா இல்லை என்கிற சான்றினை,72 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை தவிர, பிற நாட்டினருக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த, வரும் மார்ச் மாதம் 5 லட்சம் இலவச விசாக்கள் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments