வட மாநிலங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் ; வடமாநிலங்களுக்கு விரைந்த சிறப்பு மருத்துவக்குழு
வட மாநிலங்களில், கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு, சிறப்பு மருத்துவக் குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
நவம்பர் மாத தொடக்கத்தில், நாடு முழுவதும் 1,16,991 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் 90 சதவீத பாதிப்பு வட மாநிலங்களில் தான் கண்டறியப்பட்டது.
டெல்லியில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், டெங்கு பாதிப்பு திடீரென ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில், அதீத மழைப்பொழிவால் கொசுக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருப்பதே, டெங்கு பாதிப்பு அதிகரித்திருப்பதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் மாதம் கனமழை பெய்துள்ளது.
Comments