இந்தியா மீதான தடைகளை விலக்குவது பற்றி அமெரிக்கா முடிவெடுக்கவில்லை ; அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு உபகரணங்களை வாங்குவதால் இந்தியா மீது பிறப்பிக்கப்பட்ட தடைகளை விலக்குவது பற்றி இதுவரை அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
CAATSA எனப்படும் அமெரிக்காவின் தடைகள் பாயும் என்பதால் நட்பு நாடுகளும், கூட்டாளிகளும் ரஷ்யாவிடம் இருந்து எந்த விதமான ராணுவ கொள்முதல்களையும் நடத்தக்கூடாது என ஏற்கனவே அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ரஷ்யா இந்த ராணுவ தளவாடத்தை வழங்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், CAATSA தடை என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், எந்த நாடும் அதில் இருந்து இயற்கையாகவே விதிவிலக்கு பெற முடியாது என விளக்கம் அளித்தார்.
அதே நேரம் எந்த விதமான தடைகள் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
Comments