கொரோனா தடுப்பூசி போடாதவர்களை லாக்டவுனில் வைக்க ஆஸ்திரியா அரசு முடிவு

0 2420
கொரோனா தடுப்பூசி போடாதவர்களை லாக்டவுனில் வைக்க ஆஸ்திரியா அரசு முடிவு

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை லாக்டவுனில் வைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரேலியாவில், 65 சதவிகதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

எனவே தடுப்பூசி போடாதவர்களிடம் இருந்து தொற்று பரவுவதை தடுப்பதற்காக அவர்களை வீட்டு லாக்டவுனில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது தாங்கள் அண்மையில் கொரோனா தொற்று பாதித்து அதலிருந்து குணமாணவர்கள் என்பதற்கான ஆதாரங்களை காட்ட முடியாதவர்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீடுகளை விட்டு வெளியேற முடியாது.

வரும் 10 நாட்களில் போலீசார் துணையுடன் இந்த லாக்டவுன் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனை மீறுபவர்களுக்கு 570 டாலர் அதாவது சுமார 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments