நேரடிமுறையில் எழுத்துத் தேர்வு எழுத எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேரடிமுறையில் எழுத்துத் தேர்வு எழுத எதிர்ப்புத் தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவலின் காரணமாக ஆன்லைனிலே வகுப்புகள் நடத்திவிட்டு தேர்வுகள் மட்டும் நேரடிமுறையில் நடத்துவதா என்று இன்று துவங்கவிருந்த செமஸ்டர் தேர்வை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் போரட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மாணவர்கள் சார்பில் ஐந்து பேரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஆட்சியர் அனீஷ் சேகர், ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து துணைவேந்தர், கல்லூரி நிர்வாகம் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவை கூறுவதாக தெரிவித்தார்.
அதன்பின்னர் போரட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments