காற்று மாசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் - டெல்லி அரசு
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முழு ஊரடங்கு அமல்படுத்த முடியுமா என கடந்த விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த டெல்லி அரசு, மாநிலத்தின் அண்டைப் பகுதிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம் என தெரிவித்தது.
இதனை அடுத்து, காற்று மாசுபாட்டிற்கு வைக்கோல்களை எரிப்பது மட்டுமே காரணமில்லை என தெரிவித்த மத்திய அரசு, ஒற்றைப்படை அடிப்படையில் வாகனங்களை இயக்கலாம் என்றும் சரக்கு வாகனங்கள் நுழைவதை தடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில், டெல்லி அரசு விவசாயிகளை குற்றஞ்சாட்டும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தொழிற்சாலைகளின் இயக்கத்தை நிறுத்துவது, வாகனங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நாளைக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டது.
Comments