வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் - இந்திய வானிலை மையம்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறக்கூடும் எனவும், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வருகிற 17-ந் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரா, கோவா கடற்கரை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments