ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தாலிபான்கள் அணிவகுப்பு

0 5778

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தாலிபான்கள் அணிவகுப்பு நடத்தினர்.

தலைநகர் காபூலில் அமெரிக்கத் தயாரிப்பான எம் 117 கவச பாதுகாப்பு வாகனங்களில் வலம் வந்த அவர்கள், ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரிலும் சுற்றிப் பறந்தனர். வாகனங்களில் சென்ற பெரும்பாலான தீவிரவாதிகள் எம் 4 ரக துப்பாக்கிகளை ஏந்தியிருந்தனர்.

புதிதாக பயிற்சி பெற்ற 250 கமாண்டோ வீரர்களுக்காக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எனயதுல்லா குவாரஸ்மி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறும் போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விட்டு விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments