அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேலும் வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேலும் நகர்ந்து, வரும் 17ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
Comments