டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் சேர்த்தார்.
இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 18 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 53 ரன்களும், மிட்செல் மார்ஷ் 77 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தனர்.
Comments