சம்பா நெற்பயிரை திங்கட்கிழமைக்குள் காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தல்
சம்பா நெற்பயிரை நாளை திங்கட்கிழமைக்குள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சம்பா பயிர்களுக்கான காப்பீடு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 20 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நாளையுடன் முடியவுள்ளதாகவும், இதுவரை காப்பீடு செய்யாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்யுமாறும் வேளாண்மைத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments