உத்தரப்பிரதேசத்தில் 6 வழிச்சாலை ஓடுபாதையில் விமானங்களைத் தரையிறக்கி வெள்ளோட்டம்

0 2118
உத்தரப்பிரதேசத்தில் 6 வழிச்சாலை ஓடுபாதையில் விமானங்களைத் தரையிறக்கி வெள்ளோட்டம்

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் விரைவு நெடுஞ்சாலையில் போர்விமானங்களைத் தரையிறக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

தலைநகர் லக்னோவுடன் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 340 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதனிடையே சுல்தான்பூரில் விமானங்களைத் தரையிறக்குவதற்கான 3 கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தொடக்கி வைக்க உள்ள நிலையில், ஓடுபாதையில் போர் விமானங்களைத் தரையிறக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments