ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்... இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் மீது FIR பதிவு

0 3944

சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது மும்பை பந்த்ரா போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.

ஃபிட்னஸ் நிறுவனத்தின் கிளையை திறக்க ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் பிட்னஸ் நிறுவன இயக்குநர் ஆகியோர் கூறியதன் பேரில் அந்த பணத்தை கொடுத்ததாகவும் ஆனால்  தமக்கு பிட்னஸ் நிறுவனத்தின் கிளை ஒதுக்கப்படவில்லை எனவும் நிதின் பாராய் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 3 பேர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் FIR  பதிவு செய்தனர். ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா இப்போது ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments