நியூயார்க்-டெல்லி நேரடி விமான சேவை.... 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
அமெரிக்கன் ஏர்லைன்சின் நியூயார்க் - டெல்லி நேரடி விமான சேவை சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கி உள்ளது.
அதன் முதலாவது விமானம் நேற்றிரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. நியூயார்க் டெல்லி நேரடி விமான சேவையை கடந்த மாதமே துவக்க திட்டமிட்டிருந்தாலும், அமெரிக்கா கடந்த 8ஆம் தேதி தான் சர்வதேச பயணிகளுக்கான தடையை நீக்கியதால், 2 வாரம் தாமதமாகத் துவக்கப்பட்டுள்ளது.
2007ல் தொடங்கப்பட்ட சிக்காகோ-டெல்லி நேரடி விமான சேவையை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு நிறுத்தியது. இதனிடையே வரும் ஜனவரி 4ஆம் தேதி துவங்க இருந்த அமெரிக்கன் ஏர்லைன்சின் பெங்களூரு-சியாட்டில் சேவை இரண்டு மாதங்கள் கழிந்தே துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments