குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு குழந்தையின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகக் கற்க துணை நிற்போம் என கூறியுள்ளார்.
மேலும், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுச்செயல் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என எச்சரித்துள்ளார்.
Comments