வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 18-ந் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என தகவல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 18-ந் தேதி வலுப்பெற்று, ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைய தினம் அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 18ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
Comments