மகாராஷ்ட்ராவில் முக்கியத் தளபதி உள்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

0 6343

மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் முக்கியத் தளபதி உள்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சல்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், நக்சல்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட 26 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சண்டையின்போது போலீசார் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இவர்களில் 20 பேர் ஆண்கள் என்றும் 6 பேர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களில் தலைக்கு  லட்சக்கணக்கில் விலை வைக்கப்பட்டிருந்த நக்சல்களும் அடக்கம் என மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பட்டீல்  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments