சொட்டை தலைக்கு விக் வைத்து இளம்பெண்களிடம் மோசடி... தெலுங்கானாவில் இளைஞர் கைது !

0 5949

தெலுங்கானாவில் சொட்டை தலைக்கு விக் வைத்து இளம்பெண்களை ஏமாற்றி  பணம், நகைகளை சுருட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாதில் உள்ள கே.பி.எஸ்.சி காலனியை சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு கார்த்திக் வர்மா என்ற பெயரில் அறிமுகமாகிய நபர் நட்பாக பழகி 18 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார்  ஹம்சவரத்தைச் சேர்ந்த சேக் முகமது ரபி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் அவருக்கு ஏற்கனவே  மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும் 4 பெண்களிடம் இதே போன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments