நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

0 5293

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக அணையின்  நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41-வது முறையாக 120 அடியை நீர் மட்டம் எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறக்கப்படுகிறது. சுரங்க மின் நிலையம் மூலமாக 22 ஆயிரம் கன அடியும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு மூலம் 2200 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

இதனால் காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதியில்  வசிக்கும் 12 மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments