கேல் ரத்னா விருது பெற்ற நீரஜ் சோப்ரா.... 35 பேருக்கு அர்ஜூனா விருதுகள்

0 2938

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளையும் வழங்கினார்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதையும், 35 பேருக்கு அர்ஜூனா விருதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை வழங்கினார்.

பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இருவேறு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அவனி லேகாராவிற்கும் குடியரசுத் தலைவர், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜிற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கினார்.

மேலும், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, மல்யுத்த வீரர் ரவிக்குமார், ஹாக்கி வீரர்கள் ஸ்ரீஜேஷ், மன்ப்ரீத் சிங், பாராலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர் சுமித் அண்டில் உள்ளிட்டோருக்கும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருதினை வழங்கினார்.

மேலும், இந்திய ஹாக்கி அணியை சேர்ந்த 16 வீரர்கள், பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, வாழ்நாள் பிரிவில் 5 பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments