குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
வாடிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்திரைத்தாள் வாங்க அதன் விற்பனையாளர்கள், அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க எஸ்.பி.ஐ.க்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணையில், முத்திரைத்தாள் வாங்க அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாளும் கட்டணத்தில் விலக்குதர கருவூல இயக்குனர் கடிதம் அனுப்பியபோதும், அதற்கு பதிலளிக்காத எஸ்.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், முத்திரைத்தாள் கொள்முதலுக்கான தொகைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் இது தொடர்பாக அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் எஸ்.பி.ஐ. பொது மேலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments