மணிப்பூரில் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் - ராணுவ அதிகாரி, அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

0 3046

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி, அவரது குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் என 7 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அசாம் ரைஃபல்ஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி, அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளிட்டோர் வாகனங்களில் சென்றபோது தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கர்னல் விப்லவ் திரிபாதி, அவரது குடும்பத்தினருடன் சென்றபோது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், அவர் வாகனம் மீதும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தி, பின் துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி, அவரது குடும்பத்தினர், 4 வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments