அழிந்து வரும் பிரேசிலின் அமேசான் காடுகள்
பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதற்கு முன் இல்லாத அளவில் காடு அழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசிலின் National Institute for Space Research கூறியுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபரில் அழிந்து போன காடுகளை விட இந்த ஆண்டு அக்டோபரில் 5 சதவீத அதிக காடுகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் விவசாயம் செய்வதால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 880 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிந்துள்ளன.
2019-ல்
அதிபர் ஜேர் போல்ஸனாரோ ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான அமேசான் காடுகள் அழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments