கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள என்.என்.கண்டிகை தரைப்பாலம் சேதம்... 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு.!
திருத்தணி அடுத்துள்ள என்.என்.கண்டிகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் தமிழக எல்லை கிராமங்களான என்.என். கண்டிகை, சிவாடா, வெங்கடாபுரம், நெமிலி மற்றும் சந்தன கோபாலபுரம் ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமவாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை தரைப்பாலம் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில்,மேம்பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments