இந்தியா அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலனை ; பிரதமர் இம்ரான்கான்
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு இந்தியா மனித நேய உதவிகள் அனுப்ப உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் விமானங்கள் பாகிஸ்தான் வான் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆப்கானுக்கான மனித நேய உதவிகளை கொண்டு செல்லும் இந்திய விமானங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.
இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments