ஏற்காடு மலைப் பாதையில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ; சீரமைப்பு பணிகள் தீவிரம்

0 2848
மலைப் பாதையில் மீண்டும் பாறை சரிந்து விழுந்தது

சேலம் ஏற்காடு மலைப் பாதையில் நேற்றிரவு மீண்டும் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவு 7 மணி அளவில் 60 அடி சாலையில் அடுத்தடுத்து 2 பாறைகள் விழுந்ததாக கூறப்படும் நிலையில் ஒரேயொரு வாகனம் மட்டும் செல்லும் அளவுக்கு சாலை சுருங்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை கொட்டி வந்ததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மலைப் பாதையில் வரும் வாகன ஓட்டிகள் கவனமுடன் வருமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments