கூட்டு பலாத்கார வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனை
கூட்டு பலாத்கார வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவர் சித்ரகூட் என்ற இடத்தில் சுரங்கத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரையும், அவரது மகளையும் கூட்டுப் பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்யாத நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி லக்னோ கவுதம்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, ஆஷிஷ் சுக்லா, அசோக் திவாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments